ஒரே நாளில் ரிலீஸாகும் சூரி, சந்தானம், யோகி பாபுவின் படங்கள்

ஒரே நாளில் ரிலீஸாகும் சூரி, சந்தானம், யோகி பாபுவின் படங்கள்


சென்னை,

தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கி, தற்போது கதாநாயகர்களாக வலம் வருபவர்கள் சந்தானம், சூரி மற்றும் யோகி பாபு. ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் இவர்கள் நடித்துள்ள திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸாக உள்ளன.

அதன்படி, நடிகர் ஆர்யா மற்றும் நிகாரிகா எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இப்படம் வருகிற 16-ம் தேதி வெளியாக உள்ளது.

மறுபுறம் ‘விலங்கு’ வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள படம் ‘மாமன்’. ‘கருடன்’ திரைப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். சூரியின் தங்கையாக நடிகை ஸ்வாசிகா நடித்திருக்கும் இப்படம் வருகிற 16-ம் தேதி வெளியாக உள்ளது.

அதேபோல், விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள படம் ‘ஜோரா கைய தட்டுங்க’. ஹரிஸ் பேரடி, வசந்தி, ஜாஹிர் அலி, மணிமாறன், சாந்தி தேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படம் வருகிற 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *