‘ஜெயிலர் 2’ படத்திற்காக மோகன்லாலை நேரில் சந்தித்த நெல்சன்

‘ஜெயிலர் 2’ படத்திற்காக மோகன்லாலை நேரில் சந்தித்த நெல்சன்


சென்னை,

பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இவர் ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, விஜய்யின் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களை இயக்கி வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியை வைத்து ‘ஜெயிலர்’ படத்தை இயக்கினார். இப்படம் ரூ.650 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து தற்போது ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர். முதல் பாகத்தை போலவே சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து சிவராஜ்குமார் படத்தில் நடிப்பதை உறுதிசெய்தார்.

அதனை தொடர்ந்து, நடிகர் மோகன்லாலை இயக்குனர் நெல்சன் நேரில் சந்தித்து படப்பிடிப்பு தொடர்பான விஷயங்களை பேசியுள்ளார். இதன் மூலம் மோகன்லால், ஜெயிலர் 2 படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் மோகன்லால் ‘மேத்யூ’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *