2 நாட்களில் ரெட்ரோ படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

2 நாட்களில் ரெட்ரோ படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ரெட்ரோ 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

இதை தொடர்ந்து முதல் முறையாக சூர்யாவுடன் ரெட்ரோ படத்தில் கூட்டணி அமைத்தார். சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் ஒரு திரைப்படம் உருவாகிறது என்றால், கண்டிப்பாக மாபெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும்.

2 நாட்களில் ரெட்ரோ படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Retro Movie 2 Days Box Office

மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்புடன் கடந்த மே 1 இப்படம் வெளிவந்தது.

ஆனால், ரசிகர்களை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. மாறாக கலவையான விமர்சனங்களை பெற்றது. இது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது.

2 நாட்களில் ரெட்ரோ படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Retro Movie 2 Days Box Office

வசூல்

இந்த நிலையில், 2 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் ரெட்ரோ திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரெட்ரோ படம் 2 நாட்களில் உலகளவில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *