நானியின் 'ஹிட் 3' படத்தில் கேமியோ ரோலில் இவரா?

நானியின் 'ஹிட் 3' படத்தில் கேமியோ ரோலில் இவரா?


சென்னை,

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தை தொடர்ந்து நானி, ‘ஹிட் 3’ படத்தில் நடித்து முடித்துள்ளார். கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.

இப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் பெரிய ஹிட் அடித்ததைத் தொடர்ந்து மூன்றாம் பாகம் தயாராகி வருகிறது. பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலாகின.

இந்த நிலையில் நடிகர் நானி மற்றும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது ஹிட் 3 படத்தின் அப்டேட்டை பகிர்ந்துள்ளனர். அதாவது, தமிழ் நடிகர் ஒருவர் இப்படத்தில் கேமியா நடித்துள்ளதாகவும், நிச்சயம் ஒரு சர்ப்ரைஸ் கேமியோ இருக்கு என்றும் தெரிவித்துள்ளனர். அந்த சர்ப்ரைஸ் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் திரையரங்குகளில் சென்று பாருங்கள் என்றனர். அந்த கேமியோ ரோலில் நடிகர் கார்த்தி நடித்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. 

 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *