பிரித்விராஜ் நடிக்கும் "நோபடி" படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

பிரித்விராஜ் நடிக்கும் "நோபடி" படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்


மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். அதே சமயம் இவர் இயக்குனராகவும் உருவெடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் கடந்த மார்ச் 27ம் தேதி பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகியிருந்த எம்புரான் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் பிரித்விராஜ். மேலும் இவர் சலார் 2 போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார். 

‘நோபடி’ படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை ஏற்கனவே வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி எர்ணாகுளத்தில் இப்படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை நிசாம் பஷீர் இயக்குகிறார். இப்படத்தில் பிரித்விராஜுடன் இணைந்து பார்வதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணி என்னு நிண்டே மொய்தீன் , மை ஸ்டோரி ஆகிய படங்களில் இணைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் நோபடி படத்தில் இணைந்திருக்கிறது. ஈ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து பிரித்விராஜ் இந்த படத்தினை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

A post shared by POFFACTIO (@poffactio)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *