அல்லு அர்ஜுனின் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்

அல்லு அர்ஜுனின் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்


சென்னை,

பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு, வாரிணி தம்பதியின் மகன் சாய் அபயங்கர். இவர் ‘கட்சி சேர’ என்ற ஆல்பம் பாடலை பாடி, இசையமைத்து வெளியிட்டார். இது நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ‘ஆச கூட’, ‘சித்திரபுத்திரி’ என்ற பாடல்களை வெளியிட்டார்.

இதனால் அவருக்கு லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ‘பென்ஸ்’ படத்திற்கும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்திற்கும் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து சிம்புவின் ‘எஸ்டிஆர் 49’ மற்றும் பிரதீப் ரங்கநாதனில் புதிய படம் என அடுத்தடுத்து படங்களில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மேலும் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இயக்குனர் அட்லீ – அல்லு அர்ஜுன் கூட்டணியில் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக உள்ள படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *