'குட் பேட் அக்லி' படத்தின் புரோமோ வெளியீடு

'குட் பேட் அக்லி' படத்தின் புரோமோ வெளியீடு


சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரியா வாரியர், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனால், இப்படம் நிச்சயம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை டிக்கெட் முன்பதிவில் மட்டும் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

‘யு/ஏ’ தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் மொத்தமாக 2 மணி நேரம் 18 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. குட் பேட் அக்லி படம் நாளை வெளியாக உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *