தி டெவில்’ படத்தின் ‘செட்டாகாதே’ பாடல் வெளியானது|Setaagaade lyrical vidio out now

தி டெவில்’ படத்தின் ‘செட்டாகாதே’ பாடல் வெளியானது|Setaagaade lyrical vidio out now


சென்னை,

கன்னட சினிமாவில் சுதீப், யாஷ் போன்ற சீனியர் மாஸ் ஹீரோக்களுக்கு சவால் கொடுக்கும் விதமாகப் பல ஜூனியர்கள் வளர்ந்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் ‘ஆக்சன் கிங்’ அர்ஜுனின் சகோதரி மகனான துருவா சர்ஜா. தொடக்கத்தில் காதல் கதைகளில் நடித்து வந்த இவர், அதிரடி ஆக்சன் வேடங்களில் திறமையைக் காட்டினார். இப்போது கன்னட ரசிகர்கள் இவரை ‘ஆக்சன் பிரின்ஸ்’ என்று அழைக்கிறார்கள். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள பான் இந்திய திரைப்படம் ‘கேடி – தி டெவில்’.

இயக்குனர் ‘ஷோமேன்’ பிரேம் இயக்கும் இப்படத்தில் காளி என்ற கதாபாத்திரத்தில் துருவா நடிக்கும் இந்த படத்தை கே.வி.என். புரொடக்ஷன் தயாரித்துள்ளது. ரீஷ்மா நானையா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான ‘சிவா சிவா’ வெளியானநிலையில், தற்போது 2-வது பாடலான ‘செட்டாகாதே’ பாடல் வெளியாகி இருக்கிறது. இப்பாடலை தமிழில் நகாஷ் அஜீஸ் பாடியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *