பிரபாஸ் பட அப்டேட் பகிர்ந்த "அனிமல்" பட இயக்குநர்

பிரபாஸ் பட அப்டேட் பகிர்ந்த  "அனிமல்" பட இயக்குநர்


நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சலார்’ மற்றும் ‘கல்கி 2898 ஏடி’ படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதில், ‘கல்கி 2898 ஏடி’ ரூ.1,050 கோடி வசூலித்திருக்கிறது. இந்த படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.அதன்படி, ‘ஸ்பிரிட்’, ‘சலார் 2’ மற்றும் ‘ராஜா சாப்’ உள்ளிட்ட பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் .’ஸ்பிரிட்’ பிரபாசின் 25வது படமாகும். இதனை, ‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் ‘அனிமல்’ ஆகிய படங்களை இயக்கி பிரபலமான சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார். மேலும், இப்படம் 8 மொழிகளில் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளதாகவும் தெரிகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்த ஆண்டு இறுதியில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் பிரபாஸ் இரட்டை வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. பாலிவுட் பிரபலங்களான சயிப் அலிகான், கரீனா கபூர் நடிப்பதாக தகவல் சமீபத்தில் தகவல் வெளியாகியது. இந்தப் படத்தை பத்ரகாளி பிக்சர்ஸ், டி- சீரிஸ் இணைந்து தயாரிக்கிறது. பிரபாஸுக்கு வில்லனாக கொரியன் சூப்பர் ஸ்டார் மா டோங்-சியோக் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குநர் மெக்சிகோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது: “ஸ்பிரிட் படத்தின் படப்பிடிப்புக்கான இடங்களை பார்வையிடவே நான் மெக்சிகோ வந்தேன். தற்போதைக்கு இதுதான் ஸ்பிரிட் படத்துக்கான அப்டேட். நாளை மீண்டும் ஹைதராபாத்துக்கு செல்லவிருக்கிறேன்” என்றார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *