100-வது நாளில் "மார்கோ" சிறப்பு போஸ்டர் வெளியீடு

100-வது நாளில் "மார்கோ" சிறப்பு போஸ்டர் வெளியீடு


மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உன்னி முகுந்தன். இவர் கேரள ரசிகர்களையும் தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இவரது நடிப்பில் வெளியான ‘சீடன்’ மற்றும் ‘கருடன்’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இயக்குனர் ஹனீப் அடேனி இயக்கத்தில் இவரது நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி வெளியான படம் ‘மார்கோ’. இப்படத்திற்கு சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய ‘கே ஜி எப், சலார்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இதற்கு இசையமைத்துள்ளார். ஆக்சன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் யுக்தி தரேஜா, சித்திக், ஜெகதீஷ் , அபிமன்யூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் முதல் நாளில் ரூ.10.8 கோடி வசூல் செய்தது. இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதீத வன்முறை காட்சிகள் கொண்ட படமாக உருவாகியுள்ள ‘மார்கோ’ படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியது தணிக்கை வாரியம். ஏ சான்றிதழ் காரணமாக இந்த படத்தை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் சாட்டிலைட் உரிமை ஏற்கனவே தணிக்கை வாரியத்தால் மறுக்கப்பட்டிருந்தது. இப்படம் கடந்த பிப்ரவரி 14ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்தப் படம் தற்போது 100வது நாளை கடந்துள்ளது. அதற்காக சிறப்புப் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் உன்னி முகுந்தன் “வரலாற்றில் இடம்பிடித்த மார்கோ படம்100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி ரூ.100 கோடியை வசூலித்துள்ளது” என்றார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *