If you troll the movie “Kannappa”, you will incur the wrath of Lord Shiva – Actor Raghu Babu | “கண்ணப்பா” படத்தை ட்ரோல் செய்தால் சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்

If you troll the movie “Kannappa”, you will incur the wrath of Lord Shiva – Actor Raghu Babu | “கண்ணப்பா” படத்தை ட்ரோல் செய்தால் சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்


தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் ‘கண்ணப்பா’. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும், மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 25ம் தேதி வெளியாக உள்ளது.

சமீபத்தில் மோகன்பாபு நடிக்கும் மஹாதேவ சாஸ்திரி கதாபாத்திரத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவுடன் ‘ஓம் நம சிவாய’ என்ற பாடல் வெளியானது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானநிலையில், அடுத்ததாக அனைவரின் கவனமும் டிரெய்லர் மீது உள்ளது.

‘கண்ணப்பா’ படத்தை யாராவது ட்ரோல் செய்தால், அவர்கள் சிவபெருமானின் முழு கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாக நேரிடும் என்று நடிகர் ரகுபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் கடுப்பான நெட்டிசன்கள்,’நல்ல படம் எடுக்கவில்லை என்றால், நீங்க தான் நரகத்திற்கு போவீர்கள்’என கவுண்ட்டர் கொடுத்து வருகின்றனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *