வீணாக வம்பை விலைக்கு வாங்கும் முத்து, வீடியோ ஆதாரம் வேறு… சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ

சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை, டிஆர்பியில் டாப்பில் இருந்து வருகிறது.
இன்றைய எபிசோடில், ஆரம்பத்தில் ரோஹினி மனோஜ் பெயரை தனது கையில் பச்சைக் குத்திக் கொண்ட விஷயம் குடும்பத்தினர் இடையில் பேசப்படுகிறது. பின் விஜயாவை மீனாவிற்கு எதிராக சிந்தாமணி ஏற்றி விடுகிறார்.
இதனால் விஜயா, மீனாவின் பூ வியாபாரத்தை நிறுத்திக் காட்டுகிறேன் என சபதம் போடுகிறார்.
இன்னொரு பக்கம் பரசுவின் மகளை அவரிடம் கொண்டு சேர்கிறார்கள் முத்து மற்றும் மீனா. அவ்வளவு தான் இன்றைய எபிசோட் எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் முடிகிறது.
புரொமோ
பின் நாளைய எபிசோட் புரொமோவில் முத்து வீணாக வம்பை விலைக்கு வாங்குகிறார்.
அவரிடம் பிரச்சனை செய்த டிராபிக் போலீஸ் ஹெல்மெட் இல்லாமல் போன் பேசிக்கொண்டே சென்றபோது வீடியோ எடுத்து அவரது பைக்கையும் லாக் செய்துவிடுகிறார். இதனால் அடுத்து என்ன பிரச்சனை வரப்போகிறதோ தெரியவில்லை.
இதோ புரொமோ,