நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள சாவா படத்தின் முதல்நாள் வசூல்

சாவா படம்
பாலிவுட் சினிமாவில் நிறைய வாழ்க்கை வரலாறு படங்கள் வருகிறது.
அப்படி மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி- சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் சாவா.
லக்ஸ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடிக்க ராஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ்
ரூ. 130 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி திரைக்கு வந்தது.
மக்களின் பேராதரவை பெற்றுவரும் இப்படம் இந்திய அளவில் மட்டும் ரூ. 33.1 கோடி வசூல் செய்ய உலகளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.






