இடிக்கப்பட்ட உதயம் தியேட்டர்.. நொறுங்கி விழும் கடைசி காட்சி

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருந்து வந்தது உதயம் தியேட்டர். குறைந்த டிக்கெட் விலையில் படம் பார்க்க பலரும் தேடி சென்ற தியேட்டர் அது.
தற்போது ரசிகர்கள் வரத்து குறைவால் உதயம் தியேட்டர் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் ஒரு சொகுசு அபார்ட்மெண்ட் கட்டப்பட இருக்கிறது.
நொறுங்கிய தியேட்டர்
உதயம் தியேட்டரை இடிக்கும் பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. தற்போது மொத்த கட்டிடமும் இடிந்து விழும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
சினிமா ரசிகர்கள் பலரையும் இந்த காட்சிகள் சோகம் அடைய வைத்து இருக்கிறது.