ஹேக் செய்யப்பட்ட த்ரிஷாவின் கணக்கு.. நான் பதிவிடவில்லை என விளக்கம்

நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். 20 வருடங்களை கடந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வரும் அவர் சமீபத்தில் ரிலீஸ் ஆன அஜித்தின் விடாமுயற்சி படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார்.
அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது த்ரிஷா ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறி இருக்கிறார்.
ஹேக் ஆன ட்விட்டர்
தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்றும், அதை மீட்கும் வரை அதில் போடப்படும் பதிவுகள் என்னுடையது அல்ல என அவர் கூறி இருக்கிறார்.
அதை மீட்பதற்கான நடவடிக்கைகளை செய்து வருவதாகவும் கூறி இருக்கிறார் அவர்.