ஜீ தமிழ் சேனல் பெயரில் மோசடி செய்யும் நபர்கள்.. அதிர்ச்சி தகவல் வெளியிட்ட சேனல்

ஜீ தமிழ் சேனல் பெயரில் மோசடி செய்யும் நபர்கள்.. அதிர்ச்சி தகவல் வெளியிட்ட சேனல்


தமிழ்நாட்டில் முன்னணி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். பல முக்கிய சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்து வருகிறது ஜீ தமிழ்.

சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு அடுத்து டிஆர்பி ரேட்டிங்கில் ஜீ தமிழ் தான் இருக்கிறது என்றும் சொல்லலாம்.

ஜீ தமிழ் சேனல் பெயரில் மோசடி செய்யும் நபர்கள்.. அதிர்ச்சி தகவல் வெளியிட்ட சேனல் | Zee Tamil Warning To Movie Producers Fake Persons

மோசடி

இந்நிலையில் ஜீ தமிழ் சேனல் பெயரை பயன்படுத்தி சில மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகவும், அவர்கள் சேனல் அங்கீகரித்த நபர்கள் அல்ல என ஜீ தமிழ் விளக்கம் கொடுத்து இருக்கிறது.

இது பற்றி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “OTT தளங்கள், தொலைக்காட்சி, ஸ்டுடியோக்களில் திரைப்படத்தை வெளியிட அல்லது விற்பனை செய்ய உதவுவதாக கூறி தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட துறையை சேர்ந்தவர்களிடம் பணம் கேட்டு மோசடி செய்ய முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.”

“இதை நம்பி பணப் பரிவர்தனைகளிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்த படுகிறார்கள்” என தெரிவித்து உள்ளனர். 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *