திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்ற ‘தண்டகாரண்யம்’ படக்குழு

திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்ற ‘தண்டகாரண்யம்’ படக்குழு


கடந்த 2019-ம் ஆண்டு அதியன் ஆதிரை இயக்கத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் உருவான படம் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஆதியன் ஆதிரை இயக்கும் இரண்டாவது படம் ‘தண்டகாரண்யம்’. இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

‘அட்டகத்தி’ தினேஷ், கலையரசன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ், யுவன்மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான ‘தண்டகாரண்யம்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், தண்டகாரண்யம் படக்குழுவினர் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி.அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *