ஜீ தமிழின் Dance Jodi Dance நிகழ்ச்சிக்கு வந்த புதிய தொகுப்பாளர்… அட இவர்தானா, இனி கலக்கல் தான்…

ஜீ தமிழ்
ஜீ தமிழில் பிரபலமான ரியாலிட்டி ஷோக்கள் என்றால் அது சரிகமப மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகள் தான்.
சில நாட்களுக்கு முன்பு டான்ஸ் ஜோடி டான்ஸ் Lil Champs நிகழ்ச்சி சமீபத்தில் முடிவுக்கு வந்தது, இந்த சீசன் டைட்டிலை அபிஷேகா தட்டிச்சென்றார். அதோடு அவருக்கு ரூ. 1 கோடி பரிசும் கொடுக்கப்பட்டது, அவருக்கு மக்கள் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர்.
நடனம்
சரிகமப நிகழ்ச்சி முடிவுக்கு வந்த நிலையில் இப்போது அடுத்து ஜீ தமிழின் ஹிட் நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் புதிய சீசன் தொடங்க உள்ளதாம்.
புதிய சீசன்
நடுவர்களாக 90ஸ் கிட்ஸ் ரசித்த ஹிட் ஜோடியான பிரசாந்த் மற்றும் சிம்ரன் கலந்துகொள்ள உள்ளனர்.
வரும் ஜுன் 13ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள இந்த சீசனை காண ரசிகர்களும் மிகவும் ஆவலாக உள்ளனர். போட்டியாளர்கள் எல்லாம் யார் யார் என இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில் இந்நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் குறித்த தகவல் வந்துள்ளது.
கடந்த சீசனில் விஜய் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்கினார்கள், இந்த முறை மணிமேகலையுடன் விஜய்க்கு பதிலாக அசார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளாராம்.






