புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள ஆனந்த ராகம் சீரியல் நடிகர் அழகப்பன்… நாயகி யார் தெரியுமா?

அழகப்பன்
சன் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஒரு சீரியல் ஆனந்த ராகம்.
அழகப்பன், அனுஷா பிரதாப், ப்ரீத்தி சஞ்சீவ் என பலர் நடிக்க இந்த தொடர் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்டு படு வெற்றிகரமாக ஒளிபரப்பாகியது. தொடரில் இந்த 2026ல் ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது.
இதில் நாயகனாக நடித்த அழகப்பனுக்கு தொடர் பெரிய ரீச் கொடுத்திருந்தது.
புதிய சீரியல்
ஆனந்த ராகம் சீரியலில் பல வருடங்களாக நடித்த அழகப்பன் இப்போது புதிய தொடரில் கமிட்டாகியுள்ளார்.
இந்த புதிய சீரியலில் அவருக்கு ஜோடியாக ஜோவிதா நாயகியாக நடிக்க உள்ளாராம். இந்த புதிய ஜோடி இணையும் சீரியலை சரிகமப புரொடக்ஷன் தயாரிக்கிறதாம்.
மற்றபடி சீரியல் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.






