That incident in the caravan…I couldn’t even cry – Actress Tamannaah | கேரவனில் நடந்த அந்த சம்பவம்..என்னால் அழக்கூட முடியவில்லை

தமன்னா 16 வயதிலேயே சினிமாவுக்கு வந்து பிரபல நடிகையாக உயர்ந்தார். தமிழில் விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களோடு நடித்துள்ளார். ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் நடனமாடி அனைவரது கவனத்தை ஈர்த்தார். சமீபத்தில் அவரது பப்ளி பவுன்சர், லஸ்ட் ஸ்டோரிஸ் படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றன. ‘ஸ்ட்ரீ 2’ படத்தில் ‘ஆஜ் கி ராத்’ என்ற பாடலில் நடனமாடியிருந்தார். இந்தப் பாடல் 78 கோடி பார்வைகளைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. ‘ஸ்ட்ரீ 2’ படம் இந்தி படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை பெற்றுள்ளது.
சமீபத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமன்னா ‘நான் எனது கேரவனில் இருக்கும்போது எனக்கு விரும்பத்தகாதது நடந்தது. அதனால் மிகவும் வருத்தமடைந்தேன். எனது கண்கள் குளமாகின. நான் கண்ணிமைகளுக்கு மஸ்காராவும் முகம் முழுக்க ஒப்பனையுடனும் இருந்தேன். நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும். அதனால் அப்போது அழ முடியாது. அப்போது எனக்குநானே ‘இது ஒரு உணர்ச்சிதான். இதை நான் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்’ என சொல்லிக்கொண்டேன். அதன்பிறகு, சோகத்தில் இருந்து மகிழ்ச்சியான உணர்வுக்கு மாற்றிக்கொண்டேன். அந்த தருணத்தில் கண்ணாடியைப் பார்த்து தன்னைத்தானே தேற்றிக்கொண்டு, அந்த துயரத்தில் இருந்து மீண்டேன்’ என உருக்கமாக பேசியுள்ளார்.
எனினும் தமன்னா கூறிய விரும்பத் தகாத சம்பவம் என்ன என்று அவர் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் எந்த படப்பிடிப்பின்போது நடந்தது என்பதையும் அவர் கூற முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.