புதிய உணவகம் தொடங்கியுள்ள பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.. எங்கே, என்ன பெயர்?

புதிய தொழில்
பிரபலங்கள் சினிமாவில் நடிப்பதை தாண்டி சொந்த தொழில்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
அதிலும் முக்கியமாக பல பிரபலங்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் அதிக முதலீடு செய்கிறார்கள். அப்படி ஒரு நடிகை திறந்துள்ள புதிய உணவகம் குறித்த தகவல் தான் வெளியாகியுள்ளது.
கங்கனா ரனாவத்
தமிழில் தாம்தூம், தலைவி, சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களிடம் ரீச் செய்ய பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தான் புதிய உணவகத்தை திறந்துள்ளார்.
அவர் இமய மலைப்பகுதியில் ஒரு ஹோட்டல் திறந்துள்ளார், அதில் பாரம்பரிய உணவு வகைகள் நவீன முறையில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இமயமலையின் அழகை ரசித்தபடி உணவு உண்ணும் வகையில் இந்த ஓட்டலை அவர் கட்டி இருக்கிறார். இந்த உணவகத்தை வரும் பிப்ரவரி 14ம் தேதி அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்க இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.