ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?.. வெளிவந்த அறிவிப்பு

கேம் சேஞ்சர்
தமிழ் சினிமாவில் உள்ள நம்பிக்கையான, ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனராக உள்ளவர் ஷங்கர்.
இவரது இயக்கத்தில் கடைசியாக தெலுங்கின் டாப் நடிகர் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடிக்க வெளியான படம் கேம் சேஞ்சர்.
ஒரு பாடலுக்கே ரூ. 90 கோடிக்கு மேல் செலவழித்து பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் கடந்த ஜனவரி 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
புதிய கூட்டணியில் இப்படம் உருவாக ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்தார்கள், ஆனால் படம் சரியாக ஓடவில்லை.
ஓடிடி ரிலீஸ்
திரையரங்குகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஓடிடி தள ரிலீஸ் குறித்து தகவல் வந்துள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகிற 7ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.