வைபவ் நடிக்கும் "ஆலம்பனா" படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை,
நடிகர் வைபவ் தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா, கோவா, மங்காத்தா ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர். அதைத் தொடர்ந்து இவர் மேயாத மான், கப்பல், லாக்கப் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து பெயர் பெற்றார்.
புதுமுக இயக்குனர் பாரி கே.விஜய் இயக்கத்தில் நடிகர் வைபவ் நடித்திருந்த படம் ‘ஆலம்பனா’. இப்படத்தில் பார்வதி நாயர், முனிஷ்காந்த், காளி வெங்கட், ஆனந்த் ராஜ், பாண்டியராஜ், லியோனி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் மற்றும் கொஸ்துப் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
குழந்தைகளுக்கு பிடித்த பேண்டஸி கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் நடிகர் முனிஷ்காந்த் அலாவுதீன் பூதம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2021ம் ஆண்டு தொடக்கத்தில் நிறைவடைந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளி போனது.
இந்நிலையில் இப்படம் மார்ச் 7ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.