அஜித் சாருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்” -யோகி பாபு|”A felicitation ceremony should be held for Ajith sir

அஜித் சாருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்” -யோகி பாபு|”A felicitation ceremony should be held for Ajith sir


சென்னை,

நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பட்டிதொட்டி எங்கும் பரவியது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மண்டேலா’ படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் ‘போட், தி கோட், டீன்ஸ்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், கார் ரேஸில் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அஜித்துக்கு பெரிய பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று யோகி பாபு கூறினார். இது குறித்து அவர் கூறுகையில்,

‘எவ்வளவு பெரிய சாதனை படைத்திருக்கிறார். அவரை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும். அவருக்கு நாம் அனைவரும் சேர்ந்து பெரிய பாராட்டு விழா நடத்த வேண்டும்’ என்றார்.

விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் நடித்திருந்த யோகிபாபு தற்போது பிரபாசுடன் தி ராஜா சாப், பூமர் அங்கிள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *