‘இதுதான் ‘சாவா’படத்தில் நான் நடிக்க காரணம்’ -ராஷ்மிகா மந்தனா

ஐதராபாத்,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட் ‘சாவா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி – சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள இதில் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்துள்ளார். ராஷ்மிகா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 14ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகா மந்தனா வீல் சேரில் வந்து கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ராஷ்மிகா பேசுகையில்,
“ஒரு நிஜ வாழ்க்கைப் போராட்ட வீரரின் கதையில் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு பெருமை. இந்த அருமையான படத்தைத் தயாரித்த தினேஷ் விஜனுக்கும், இயக்கிய லக்சுமனுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏ.ஆர்.ரகுமானின் இசை படத்தை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. சாவா’ படத்தில் சிறப்பு வாய்ந்த ஒன்று தெய்வீக உணர்வு. இதுதான் இப்படத்தில் நான் நடிக்க விரும்பியதற்கு காரணம்’ என்றார்.






