Singer Unnikrishnan son gets married… Vairamuthu congratulate the bride and groom

சென்னை,
உன்னி கிருஷ்ணன் கர்நாடக இசை பாடகர். கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். காதலன் படத்தில், ஏ ஆர் ரகுமான் இசையில் ‘என்னவளே அடி என்னவளே’ என் இவர் பாடிய பாடல் இன்று வரை காதலர்களின் பேவரட் பாடலாக உள்ளது. தன்னுடைய முதல் பாடலிலேயே இளம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவரது குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதே போல் 2ஆவது படமான பவித்ரா என்ற படத்தில் இடம் பெற்ற உயிரும் நீயே என்ற பாடலை பாடி சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது பெற்றார். இளையராஜா, வித்யாசகர், ஏ ஆர் ரகுமான், எம் எம் கீரவாணி, தேவா, யுவன் சங்கர் ராஜா, ஹரிஷ் ஜெயராஜ், பரத்வாஜ் என்று ஏராளமான இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இவரது குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் உன்னிகிருஷ்ணனின் மகனுக்கு இன்று திருமணம் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. உன்னி கிருஷ்ணனுக்கு வாசுதேவ் கிருஷ்ணா மற்றும் உத்ரா உன்னிகிருஷ்ணன் என்று ஒரு மகனும், மகளும் உள்ளனர். அப்பாவை போல் இவருடைய மகளும் இசை துறையை தேர்வு செய்து இளம் பின்னணி பாடகியாக மாறியுள்ளார்.
இந்நிலையில் உன்னி கிருஷ்ணனின் மகன், வாசுதேவ் கிருஷ்ணாவுக்கும் – உத்ரா என்பவருக்கும் இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமண நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து, உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர். இதில் என்ன ஆச்சரியம் என்றால் உன்னிகிருஷ்ணனின் மகளின் பெயரும், மருமகளின் பெயரும் ஒரே பெயர் என்பதுதான்.
உன்னிகிருஷ்ணனின் மகன் வாசுதேவ் கிருஷ்ணா மற்றும் உத்ரா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து, தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் ‘பாடகர் உன்னி கிருஷ்ணன் இல்ல திருமணம். மணமக்கள் வாசுதேவ் கிருஷ்ணா மற்றும் உத்ரா. நான் எழுதிய ஒரு பாட்டுக்கு தேசிய விருதை அவர் பெற்றார். அவர் பாடிய என் பாட்டுக்கு தேசிய விருதை நான் பெற்றேன். உள்ளங்கவர் பாடகர் குடும்பத்தை உள்ளன்போடு வாழ்த்தினேன்’ என்று கூறி என்னவளே அடி என்னவளே என்ற பாடலின் வரிகளை பதிவிட்டுள்ளார். ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.