அல்லு அர்ஜுனின் கைது பற்றிய கேள்வி

அல்லு அர்ஜுனின் கைது பற்றிய கேள்வி


சென்னை,

கடந்த மாதம் 5-ம் தேதி வெளியான புஷ்பா 2 அல்லு அர்ஜுனின் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. ஆனால், 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் புஷ்பா-2 திரைப்பட சிறப்பு காட்சியின்போது, அல்லு அர்ஜுனை காண அதிகளவு ரசிகர்கள் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் அல்லு அர்ஜுனின் கைது பற்றிய கேள்விக்கு நாக சைதன்யா பதிலளித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,

‘அது துரதிர்ஷ்டவசமானது, அப்படி நடந்திருக்கக் கூடாது. ஆனால் இதுதான் வாழ்க்கை, அடுத்து என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது’ என்றார்.

நாக சைதன்யா தற்போது ‘தண்டேல்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற 7-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதில், கதாநாயகியாக சாய்பல்லவி நடித்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *