சமீபத்தில் அஜித்துக்கு போன் செய்து விஜய் சொன்ன வார்த்தை.. ஹேட்டர்ஸுகளுக்கு பதிலடி

சமீபத்தில் அஜித்துக்கு போன் செய்து விஜய் சொன்ன வார்த்தை.. ஹேட்டர்ஸுகளுக்கு பதிலடி

அஜித் 

நடிகர் அஜித் கடந்த சில வாரங்களுக்கு முன் துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் தனது குழுவுடன் பங்கேற்று, மூன்றுவது இடத்தை பிடித்து வெற்றிபெற்றார். இவருடைய வெற்றியை அனைவரும் கொண்டாடினார்கள்.

திரையுலக பிரபலங்களில் இருந்து அரசியல்வாதிகள் வரை பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ஆனால், நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை.

சமீபத்தில் அஜித்துக்கு போன் செய்து விஜய் சொன்ன வார்த்தை.. ஹேட்டர்ஸுகளுக்கு பதிலடி | Vijay Wished Ajith In Phone Call

அதே போல் சமீபத்தில் நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அப்போது கூட, விஜய்யின் இருந்து எந்த ஒரு வாழ்த்தும் வரவில்லை. அஜித்தின் நெருங்கிய நண்பரான விஜய்யிடம் இருந்து ஒரு வாழ்த்து கூட வரவில்லை என பெரும் சர்ச்சை எழுந்தது.

வாழ்த்து கூற கூட விஜய்க்கு நேரமில்லையா? என கேள்வி எழுப்பினார்கள். ஹேட்டர்ஸ் பலரும் சர்ச்சையாக பேசி வந்தனர். இந்த நிலையில், ஹேட்டர்ஸுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

சமீபத்தில் அஜித்துக்கு போன் செய்து விஜய் சொன்ன வார்த்தை.. ஹேட்டர்ஸுகளுக்கு பதிலடி | Vijay Wished Ajith In Phone Call

அஜித்துக்கு போன் செய்து விஜய் 

அஜித் கார் ரேஸில் வெற்றிபெற்றபோதும், அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவித்தபோதும், நடிகர் விஜய் போன்கால் செய்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளாராம்.

இதுகுறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறுகையில் “அஜித் சார் கார் ரேஸில் வெற்றி பெற்றதும் விஜய் சாரிடம் இருந்து தான் முதல் வாழ்த்து வந்தது. அதை போல அஜித் சாருக்கு விருது அறிவிக்கப்பட்டதும், விஜய் சாரிடமிருந்து வாழ்த்து வந்தது. இருவருக்குள்ளும் ஆர்மார்த்தமான நட்பு உள்ளது. ஆகையால் விஜய் சார் வாழ்த்து சொல்லவில்லை என வெளிவந்து தகவலில் துளியும் உண்மை இல்லை” என சுரேஷ் சந்திரா கூறியுள்ளார். இதன்மூலம் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அஜித்துக்கு போன் செய்து விஜய் சொன்ன வார்த்தை.. ஹேட்டர்ஸுகளுக்கு பதிலடி | Vijay Wished Ajith In Phone Call

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *