மகா கும்பமேளாவில் புனித நீராடினேனா? – நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம், Did he take a holy bath at Maha Kumbh Mela?

மகா கும்பமேளாவில் புனித நீராடினேனா? – நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம், Did he take a holy bath at Maha Kumbh Mela?


சென்னை,

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் நாத்திகர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் புனித நீராடி இருக்கிறீர்களே? உங்களை என்ன சொல்வது? என்று கடுமையாக விமர்சித்தும் கண்டித்தும் பதிவுகள் வெளியிட்டனர். இது பரபரப்பானது.

இந்த நிலையில் இது போலி புகைப்படம் என்று பிரகாஷ்ராஜ் காட்டமாக தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பிரகாஷ்ராஜ் கூறும்போது, “போலி தகவல் எச்சரிக்கை. இப்படி போலி புகைப்படம் வெளியிட்டு இருப்பது வெட்கக்கேடு. இது குறித்து புகார் செய்து இருக்கிறேன். சம்பந்தபட்டவர்கள் விளைவுகளை எதிர்கொள்வார்கள்” என்று தெரிவித்து உள்ளார். ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் இந்த புகைப்படத்தை உருவாக்கி வைரலாக்கி உள்ளனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *