vijayantony’s 25th film VA25 title announcement drops tomorrow

சென்னை,
விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். ‘காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், அங்காடி தெரு’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். இவர் ‘காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன்’ உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. விஜய் ஆண்டனியின் 22ஆவது படமான ‘ககன மார்கன்’ விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் 25வது படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை விஜய் ஆண்டனி தயாரிக்கிறார். அருண் பிரபு எழுதி இயக்குகிறார்.இந்தப் படத்தின் பெயர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.