மோகன்லாலுக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்?

சென்னை,
நடிகை மாளவிகா மோகனன் பல மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் பாலிவுட்டில் அறிமுகமானார். விரைவில் பிரபாசின் ‘தி ராஜா சாப்’ படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார்.
இப்படம் இந்தாண்டு மத்தியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் கார்த்தியுடன் சர்தார் 2 படத்திலும் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ஹிருதயபூர்வம் படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது உண்மையாகும் பட்சத்தில் சீனியர் ஹீரோ படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிப்பது இதுவே முதல் முறையாகும்.
மேலும், இப்படத்தில்�சங்கீதா, சித்திக், சங்கீத் பிரதாப், நிஷான், லாலு அலெக்ஸ், ஜனார்த்தனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அகில் சத்யன் வசனம் எழுத, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.