‘இனிமேல் சவாலான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்’ – சமந்தா|’I will only act in challenging roles from now on’

சென்னை,
2010-ம் ஆண்டு வெளியான ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. அடுத்து ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடித்தார். தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் கடைசியாக நடித்தார்.
இந்நிலையில் நீண்ட நாட்களாக சமூகவலைதளத்தில் இருந்து ஒதுங்கி இருந்த சமந்தா, சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்வில் பேசினார். அதில், இனிமேல் தனது படங்கள் எப்படியிருக்கும் என்பதை தெளிவுபடுத்தினார்.
அவர் கூறுகையில், ‘தொடர்ந்து படங்களில் நடிப்பது ரொம்ப சுலபம். ஆனால் ஒவ்வொரு படத்தையும் அதுதான் கடைசி படம்போல நடிக்க ஆசைப்படுகிறேன். இனிமேல் சவாலான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன். படங்களைத் தேர்ந்தெடுப்பதில் பலவிதமாக யோசித்து முடிவெடுக்கிறேன். அவசரப்படுவதில்லை’ என்றார்.