‘விடாமுயற்சி’ பட குழுவிற்கு நடிகர் பிருத்விராஜ் பாராட்டு

சென்னை,
மோகன்லால் நடிப்பில், பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘லூசிபர்’. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு ‘எல் 2 எம்புரான்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாலமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் மார்ச் 27-ம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், எல் 2 எம்புரான் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில், படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது இயக்குனர் பிருத்விராஜ் பேசுகையில், “சமீபத்தில் தமிழ் சினிமாவில் நான் பார்த்த சிறந்த டிரெய்லர்களுள் ஒன்று ‘விடாமுயற்சி’ டிரெய்லர். அந்த படத்திற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்றார்
அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி. இப்படம் அடுத்த மாதம் 6-ம் தேதி வெளியாக இருக்கிறது.