அஜித்குமாருக்கு தனுஷ் வாழ்த்து | Dhanush congratulates Ajith Kumar

அஜித்குமாருக்கு தனுஷ் வாழ்த்து | Dhanush congratulates Ajith Kumar


சென்னை,

நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதன்படி, நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அஜித்குமார் மற்றும் அஸ்வினுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

“உயரிய விருதான பத்ம பூஷன் விருது பெற்ற அன்புள்ள அஜித் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பத்ம ஸ்ரீ விருது பெற்ற முதல் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல்வேறு துறைகளில் சாதித்து தேசத்தை பெருமைப்படுத்திய, பத்ம விருது பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.”

இவ்வாறு தனுஷ் பதிவிட்டுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *