நடிகை சோபனாவுக்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு!

டெல்லி,
நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில், 2025ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி, மொத்தம் 113 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்தி வரும் நடிகை சோபனாவுக்கு பத்ம பூஷன் விருது அறிவித்து மத்திய அரசு கவுரவித்துள்ளது.
தமிழ், மலையாள பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷோபனா. பாக்யராஜுடன் ஜோடி சேர்ந்த ‘இது நம்ம ஆளு’ ரஜினியுடன் நடித்த ‘தளபதி’ பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. எனக்குள் ஒருவன், பாட்டுக்கு ஒரு தலைவன், பொன்மனச் செல்வன் என்று பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்த ‘மணிசித்திரத்தாழு’ சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது.�