பாடகி பவதாரிணியின் கடைசி ஆசை! கலங்கியபடி கூறிய கணவர் சபரிராஜ்

பாடகி பவதாரிணியின் கடைசி ஆசை! கலங்கியபடி கூறிய கணவர் சபரிராஜ்


சென்னை,

இளையராஜாவின் மகள் பவதாரிணியும் இசை உலகில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்தார். இளையராஜாவின் இசையில் ராசையா படத்தில் இடம் பெற்று இருக்கும் மஸ்தானா… மஸ்தானா… பாடல் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். அதே போல் அநேகன், இரும்பு குதிரை, பிரியாணி, மங்காத்தா, பிரண்ட்ஸ், தனம், பிதாமகன், நேருக்கு நேர் என்று பல படங்களில் பாடல்கள் பாடி ஹிட் கொடுத்திருக்கிறார்.

காதலுக்கு மரியாதை படத்தில் இன்றும் இளசுகளால் ரசிக்கப்படும் ‘என்னை தாலாட்ட வருவாளா’ என்ற பாடல் பவதாரணிக்கு கைவசமாக அமைந்த பாடல் என்றே சொல்லலாம். இளையராஜா இசையில் வெளியான பாரதி படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ என்ற பாடல் அவருக்கு தேசிய விருது வாங்கி கொடுத்தது. தன்னுடைய குரலின் தனி தன்மையே பவதாரணியை தனியாக அடையாளப்படுத்தும். அழகி படத்தில் அவர் பாடிய ‘ஒளியிலே தெரிவது தேவதையா’ பாடல் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ஒரு சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புற்றுநோய் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்த பவதாரணிக்கு மாரடைப்பும் ஏற்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.�

இந்த நிலையில் பவதாரணியின் கணவர் சபரிராஜ் பவதாரணி கடைசியாக ஆசைப்பட்ட விஷயம் குறித்து ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘பவதாரணிக்கு உடல்நிலை மோசமடைந்த நிலையில் சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்றோம். அங்கு மிகவும் உடல்நிலை மோசமடைய மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப தயாராகி வந்தோம். அந்த நேரத்தில் தான் இசை நிகழ்ச்சிக்கு இளையராஜா இலங்கை வருவதாக இருந்தது. அப்போது அவரை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர் ஆசைப்பட்டபடியே அவரது அப்பா இளையராஜாவை பார்த்தார். ஆனால், அதுவே அவரது கடைசி ஆசையாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை’ என்று அவர் கூறியுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *