ஞானவேல் கொடுத்த ட்விஸ்ட், நயன்தாராவின் செயல்.. மணிகண்டன் சொன்ன விஷயம்

ஞானவேல் கொடுத்த ட்விஸ்ட், நயன்தாராவின் செயல்.. மணிகண்டன் சொன்ன விஷயம்


மணிகண்டன்

தமிழ் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் மணிகண்டன். இந்த தலைமுறை ரசிகர்களை கவரும் வண்ணம் இவருடைய நடிப்பு வலம் வருகிறது.

விக்ரம் வேதா, காலா ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்த இவர், ஜெய் பீம் படத்தின் மூலம் சிறந்த நடிகர் என அனைவராலும் பாராட்டப்பட்டார்.

மேலும் குட் நைட் படம் இவருக்கு மாபெரும் வரவேற்பை மக்களிடையே ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு வெளிவந்த ‘லவ்வர்’ படமும் இளைஞர்களை கவர்ந்தது.

ஞானவேல் கொடுத்த ட்விஸ்ட், நயன்தாராவின் செயல்.. மணிகண்டன் சொன்ன விஷயம் | Actor About Jai Bhim Movie

தற்போது, இவர் நடித்த குடும்பஸ்தன் திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், பேட்டி ஒன்றில் நயன்தாரா மற்றும் இயக்குனர் ஞானவேல் குறித்து மணிகண்டன் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சொன்ன விஷயம் 

அதில், ” இயக்குனர் TJ ஞானவேல் சார் மீட்டிங் ஒன்றில் ஜெய் பீம் கதை குறித்து பேசி கொண்டிருந்தார். அப்போது நான் அவரிடம் நீங்கள் படம் குறித்து பேச அழைத்தீர்கள் என்று தெரியாது என்று கூறினேன்.

அப்போது ஜெய் பீம் படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று கூறினார்.

ஞானவேல் கொடுத்த ட்விஸ்ட், நயன்தாராவின் செயல்.. மணிகண்டன் சொன்ன விஷயம் | Actor About Jai Bhim Movie

அந்த சமயத்தில் நான் நயன்தாரா மேம் படமான நெற்றிக்கண் படத்தில் நடித்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் நயன்தாரா மேம் அனுமதி கொடுத்து ஒரு 20 நாட்களுக்கு மட்டும் பேசி நடித்த படம் தான் ஜெய் பீம்” என்று கூறியுள்ளார்.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *