பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமின் ‘தி டிப்ளமேட்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம். இவர் நடிப்பது மட்டுமில்லாமல் பல இந்தி படங்களை தயாரித்தும் உள்ளார். ஆக்சன் நடிப்புக்கு பெயர் போன ஜான் ஆபிரகாம் தேசிய விருது பெற்றிருக்கிறார். இவர் கடைசியாக நடித்த படம் வேதா. நிகில் அத்வானி 6 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கிய இப்படத்தில் அபிஷேக் பானர்ஜி, ஷர்வரி மற்றும் தமன்னா பாட்டியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ஜான் ஆபிரகாம் தற்போது நடித்து வரும் படம் ‘தி டிப்ளமேட்’. இப்படத்தை ரித்தேஷ் ஷாவின் திரைக்கதையில் சிவம் நாயர் இயக்கியுள்ளார். இந்த படம் ஒரு நிஜ சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற மார்ச் மாதம் 7-ம் தேதி வெளியாக உள்ளது.