தமிழகத்தில் கேம் சேஞ்சர் படத்தின் வசூல் நிலவரம்… மோசமான கலெக்ஷன்

கேம் சேஞ்சர்
ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படம் கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியாகி இருந்தது.
ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், தமன் இசையமைத்துள்ளார்.
தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் முதல் நாள் முடிவில் ரூ.186 கோடி வசூலை ஈட்டியதாக படக்குழு அறிவித்திருந்தது.
பாக்ஸ் ஆபிஸ்
ரூ. 400 கோடிக்கும் மேலான பட்ஜெட்டில் தயாரான இப்படம் 3 நாள் முடிவில் ரூ. 200 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் மட்டும் இப்படம் இதுவரை ரூ. 5.5 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளது, இது மிகவும் குறைவான வசூலாக பார்க்கப்படுகிறது.