பிரபாசின் அடுத்த படம் – வெளியான முக்கிய தகவல்|Prabhas to announce a new film this Sankranthi 2025

சென்னை,
தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் பிரபாஸ். அடுத்தடுத்து படங்களில் பணியாற்றி வரும் இவர், ஹனு ராகவபுடி இயக்கி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பின்போது காயம் அடைந்து ஓய்வில் இருக்கிறார்.
இந்நிலையில், இந்த ஆண்டு சங்கராந்தியில் (பொங்கல்) அவர் தனது அடுத்த படத்தை அறிவிக்க உள்ளதாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 14-ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, பிரபாஸ் எந்த இயக்குனருடன் இணைந்து நடிக்க உள்ளார், எந்த மாதிரியான படமாக அது இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.