விஜய், ரஜினியை தொடர்ந்து லோகேஷ் அடுத்து இயக்கப்போகும் முன்னணி நடிகர்.. யார் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. லியோ படத்தை தொடர்ந்து லோகேஷ் இப்படத்தை இயக்கி வரும் நிலையில், முதல் முறையாக ரஜினிகாந்துடன் கைகோர்த்துள்ளார்.
ரஜினிகாந்துடன் இணைந்து இப்படத்தில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகர்ஜுனா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
யார் தெரியுமா?
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் அடுத்து எந்த முன்னணி நடிகரை வைத்து படம் இயக்க போகிறார் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
அதில். “எனக்கும் அஜித் சாருடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்ற ஆசை உள்ளது. கட்டாயம் அவருடன் இணைந்து படம் பண்ணுவேன் அது விரைவில் நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது, லோகேஷ் கூறிய இந்த விஷயம் அஜித் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.