தமிழ்நாட்டில் சீன் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்
Scene movie tamilnadu box office: தமிழ்நாட்டில் சூர்யாவின் சீன் திரைப்படம் இதுவரை, அதாவது 21 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
சீன்
சூர்யாவிற்கு இந்த ஆண்டு ஹாட்ரிக் வெற்றியின் மூலம் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் மற்றும் சீன் என தொடர் மூன்று வெற்றிகளை ஒரே ஆண்டில் கொடுத்துள்ளார். இதில் சீன் திரைப்படம் வெளியாகி 21 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த 21 நாட்களில் உலகளவில் ரூ. 276 கோடி வசூல் செய்துள்ள நிலையில், விரைவில் ரூ. 300 கோடியை எட்டுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழ்நாடு வசூல் விவரம்
சரி, உலகளவில் ரூ. 300 கோடியை சீன் திரைப்படம் தொடுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதற்கு முன் இந்த 21 நாட்களில் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் வந்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் சீன் திரைப்படம் இதுநாள்வரை ரூ. 98.4 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடியை தொடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பொறுப்பு துறப்பு: சீன் திரைப்படம் 21 நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல; நம் சினி உலகம் தரப்பில் இருந்து Track செய்யப்பட்ட தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.
