பொன்னியைக் காப்பாற்ற அயலி போட்ட மாஸ்டர் பிளான்..


அயலி சீரியல்

Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் விறுவிறுப்பான தொடர் ‘அயலி’.

இந்தத் தொடரில் அடுத்தடுத்து பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், இன்றைய எபிசோடில் கடத்தப்பட்ட பொன்னியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று அயலியும் சிவாவும் களத்தில் இறங்குகின்றனர்.

அயலி சீரியல் அப்டேட்: பொன்னியைக் காப்பாற்ற அயலி போட்ட மாஸ்டர் பிளான்.. துப்பாக்கி முனையில் சிவா! | Zee Tamizh Ayali Serial Latest Episode



பொன்னியைக் கண்டுபிடிக்க அயலி போட்ட திட்டம்!



ஒருபக்கம் வர்மா, பொன்னியைக் கடத்தி வைத்துக்கொண்டு தனது ஆட்களுடன் அடுத்ததாக என்ன செய்யலாம் என்று பேசிக்கொண்டிருக்கிறான். இன்னொரு பக்கம் பொன்னியைத் தேடிக்கொண்டிருக்கும் அயலிக்கு கபிலனிடம் இருந்து போன் வருகிறது.

உடனே யாருக்கும் தெரியாமல் தனியாகச் சென்று பேசும் அயலி, பொன்னியை எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து, அந்த இடத்தின் கடைசி லொகேஷனை அனுப்பி வைக்குமாறு கபிலனிடம் சொல்கிறாள். அதுமட்டுமில்லாமல், வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரியாமல் வெளியே செல்ல ஒரு திட்டமும் போடுகிறாள். பள்ளியில் இருந்து போன் செய்வது போல பேசி, தன்னை உடனே பள்ளிக்கு வரச் சொல்லுமாறு கபிலனிடம் உதவி கேட்கிறாள்.



அயலியின் திட்டத்தை கண்டுபிடித்த செல்லம்!



அயலி போனில் பேசுவதை மறைந்திருந்து கேட்டுக்கொண்டிருக்கும் செல்லம், உடனே ரித்திகாவிடம் சென்று அயலி ஏதோ பொய் சொல்லிவிட்டு வெளியே செல்லத் திட்டமிடுவதாகச் சொல்கிறாள்.

அதேபோல் அயலிக்கு போன் வர, அவள் எந்தப் பதற்றமும் இல்லாமல் அந்தப் போனை ரித்திகாவிடம் கொடுத்து ஸ்பீக்கரில் போடச் சொல்கிறாள். மறுமுனையில் பேசும் கபிலன், பள்ளியில் ஒரு குழந்தை காணாமல் போய்விட்டதாகச் சொல்ல, இதைக் கேட்ட ரித்திகா, செல்லம், ஜமுனா மூவரும் அதிர்ச்சியடைகின்றனர். இதையடுத்து பள்ளிக்குச் சென்று வருவதாகச் சொல்லிவிட்டு அயலி அங்கிருந்து கிளம்புகிறாள்.

அயலியைப் பின்தொடரும் ரித்திகா.. துப்பாக்கி முனையில் சிவா!



ஆட்டோவில் ஏறி கபிலன் அனுப்பிய முகவரிக்குச் சென்று பொன்னியைத் தேடுகிறாள் அயலி. ஆனால், அவள் மீது சந்தேகப்படும் ரித்திகா, செல்லம், ஜமுனா மூவரும் இன்னொரு ஆட்டோவில் அவளைப் பின்தொடர்ந்து செல்கின்றனர்.



இதற்கிடையில், தொழில்நுட்ப உதவியுடன் ஐயப்பன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் சிவா, நேராக அவனது வீட்டிற்குச் செல்கிறான். மும்பையில் இருந்து வந்திருப்பதாகவும், 10 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் தருவதாகவும் சொல்லி அங்கிருக்கும் பெண்ணை நம்ப வைக்கிறான். இதை நம்பி அவள் வீட்டுக்குள் அனுமதிக்க, திடீரென துப்பாக்கியை எடுத்து அங்கிருப்பவர்களை மிரட்டுகிறான் சிவா.

இப்படி ஒருபக்கம் பொன்னியைத் தேடி அயலி கிளம்பியிருக்க, இன்னொரு பக்கம் சிவா துப்பாக்கியுடன் அதிரடி காட்டுகிறான். அயலி பொன்னியைப் பத்திரமாக மீட்பாளா? அவளைப் பின்தொடர்ந்து வரும் ரித்திகா உண்மையைக் கண்டுபிடிப்பாளா? சிவாவின் துப்பாக்கி மிரட்டலுக்குப் பின்னால் என்ன நடக்கப்போகிறது? என்பதை அறிய ‘அயலி’ தொடரைப் பாருங்கள்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *