தலைமறைவான பிக்பாஸ் முத்துக்குமரன்.. வலைவீசி தேடும் போலீஸ்
பிக் பாஸ் புகழ் முத்துக்குமரன் தன்னை திருமணம் செய்வதாக கூறி உறவில் இருந்துவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக பெண் ஒருவர் புகார் அளித்து இருந்தார்.
அது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் முத்துக்குமரன் மீது சென்னை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமறைவு
விசாரணைக்காக போலீசார் சம்மன் கொடுக்க முத்துக்குமரன் வீட்டுக்கு சென்றபோது அது பூட்டி இருந்ததாம். தொடர்ந்து பல நாட்களாக அவரது வீடு பூட்டப்பட்ட நிலையில் தான் இருக்கிறது. மேலும் அவர் செல்போன் ஸ்விச் ஆப் நிலையில் தான் இருக்கிறது.
அதனால் போலீசார் அவரை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.
