நடிகர் சூரி குடும்ப திருமணத்தில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்! வைரலாகும் வீடியோ
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆகி இருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் அடுத்து ஹீரோவாக அறிமுகம் ஆகி நடிப்பில் கவனம் செலுத்த இருப்பதாக தகவல் சமீபத்தில் வெளியாகியிருந்தது.
அதனால் தமிழ் சினிமா ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.
சூரி உறவினர் திருமணம்
இந்நிலையில் நடிகர் சூரியின் உறவினர் திருமணம் மதுரையில் நடந்திருக்கிறது. அதில் விஜய் மகன் சஞ்சய் கலந்து கொண்டிருக்கிறார்.
சூரி பொன்னாடை போர்த்தி அவருக்கு மரியாதை செய்து இருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
