பாக்ஸ் ஆபிஸ்: ஆந்திரா, தெலுங்கானாவில் மாஸ் காட்டும் ரஜினியின் ஜெயிலர் 2


ஜெயிலர் 2

தமிழ் சினிமாவில் இந்த வருடம் நிறைய முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகிவிட்டது.

பல ஹிட் என்றாலும் சில படங்கள் வந்த வேகம் தெரியாமல் சென்றுவிட்டது. அப்படி இந்த 2026ம் வருடம் வெளியான டாப் நடிகர்களின் படங்களில் செம வசூல் வேட்டை நடத்தி வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் 2.

முதல் பாக வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அதே கூட்டணியில் இரண்டாம் பாகம் வெளியாகி இருக்கிறது.

நிறைய பிரபலங்கள், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் என படம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது.

ஆந்திரா

உலகம் முழுவதும் விரைவில் படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, இதுவரை படம் ரூ. 700 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

தற்போது என்ன தகவல் என்றால் ஆந்திராவில் மட்டும் இப்படம் ரூ. 95 கோடி வரை வசூலித்துள்ளதாம், நாளை ரூ. 100 கோடியை எட்டிவிடும். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *