சன் டிவியின் அன்னம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்… நேரம் மாற்றம்..

அன்னம் சீரியல்

சன் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் அன்னம்.

அபி நட்சத்திரா மற்றும் கனா காணும் காலங்கள் தொடர் புகழ் பரத்குமார் இணைந்து இந்த தொடரில் நடித்து வருகிறார்கள்.
மேலும் இத்தொடரில் பிரியங்கா ஷிவன்னா, மனோகர், கார்த்திக், ராஜலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சன் டிவியின் அன்னம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... நேரம் மாற்றம்.. | Good News For Sun Tv Annam Serial Fans

அன்னம் தனது மாமன் மகனான கார்த்திக்கை (பரத்குமார்) காதலிக்கிறார். ஆனால் கார்த்திக் ரம்யாவை விரும்புகிறார். சூழல் காரணமாக கார்த்திக், அன்னத்தை திருமணம் செய்துகொள்கிறார்.

இதற்காக ரம்யா, கார்த்திக்கை பழிவாங்க நினைக்கிறார். இதிலிருந்து கார்த்திக்கை, அன்னம் எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதே இந்தத் தொடரின் முக்கிய கரு.

சன் டிவியின் அன்னம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... நேரம் மாற்றம்.. | Good News For Sun Tv Annam Serial Fans

நேரம் மாற்றம்


இந்த அன்னம் தொடரில் இப்போது விறுவிறுப்பான கதைக்களம் செல்கிறது. கோவில் திருவிழாவில் வெடிகுண்டு வைத்தது யார் என்ற போலீஸ் விசாரணை தான் நடக்கிறது.

கதை பரபரப்பாக செல்ல தற்போது அன்னம் சீரியல் ரசிகர்களுக்கு குட் நியூஸ் வந்துள்ளது.

சன் டிவியின் அன்னம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... நேரம் மாற்றம்.. | Good News For Sun Tv Annam Serial Fans

அதாவது மாலை 6.30 மணிக்கு தொடங்க அரைமணி நேரம் ஒளிபரப்பாகும் அன்னம் சீரியல் இனி 1 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாம். மாலை 6.30 மணிக்கு தொடங்கி 7.30 மணி வரை வரும் அக்டோபர் 26ம் தேதி முதல் 1 மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *