ஆசையாக மீனாவிடம் பேச வந்த அவரது அம்மா, ஆனால் ரேகா சொன்ன விஷயம்… சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ


சிறகடிக்க ஆசை

மனோஜ் வீட்டிற்கு தெரியாமல் பணத்திற்காக கனகாவை திருமணம் செய்துகொண்ட விஷயம் எப்போது வெளிவரும் என தெரியவில்லை. இன்றைய எபிசோடில், விஜயாவை பொண்ணு பார்க்க வந்த கதையின் காட்சிகள் ஒளிபரப்பாகிறது.

அதை நினைத்து முத்து-மீனா, ரவி-ஸ்ருதி பேசிக் கொண்டிருக்க அதை பார்த்த விஜயா பொண்ணு பார்க்க வந்த குறித்து யாரும் பேச வேண்டாம், இதை அவரிடம் கூற வேண்டாம் என்றும் கூறுகிறார்.

ஆசையாக மீனாவிடம் பேச வந்த அவரது அம்மா, ஆனால் ரேகா சொன்ன விஷயம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ | Siragadikka Aasai Serial October 20 Episode

பின் மனோஜ், விஜயாவிடம் இப்போதைக்கு எனக்கு பொண்ணு பார்க்கும் வேலையை விட்டுவிடுங்கள், விவாகரத்து கிடைக்க பிறகு பார்க்க என கூற அனைவரும் சந்தேகப்படுகிறார்கள்.

அதிலும் முத்துவிற்கு மனோஜ் மீது அதிக சந்தேகம் எழுகிறது.

புரொமோ

இன்றைய எபிசோட் அப்படியே சில சின்ன சின்ன கலாட்டாவுடன் முடிகிறது. நாளைய எபிசோடின் புரொமோவில், கோவிலில் மீனா மற்றும் அவரது அம்மா சந்தித்துக்கொள்கிறார்கள்.

இருவரும் ஆசையாக பேசிக்கொள்ள அதைப்பார்த்த ரேகா சீக்கிரம் கிளம்பனும், அர்ச்சனை முடித்துவிட்டு செல்லலாமா என்கிறார். அதைக்கேட்ட மீனா மற்றும் அவரது அம்மாவின் முகமே மாறிவிட மீனா அங்கிருந்து வருத்தத்துடன் கிளம்பிவிடுகிறார்.

ஆசையாக மீனாவிடம் பேச வந்த அவரது அம்மா, ஆனால் ரேகா சொன்ன விஷயம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ | Siragadikka Aasai Serial October 20 Episode


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *