தமிழ்நாட்டில் முதல் வார இறுதி வரை ஜெயிலர் 2 செய்துள்ள வசூல்
Jailer 2 Tamilnadu Box office: ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் வார இறுதி வரை செய்துள்ள மொத்த வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்ப்போம்.
ஜெயிலர் 2
நெல்சன் திலீப்குமார் – ரஜினிகாந்த் – அனிருத் கூட்டணியில் உருவாகி கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் எவ்வளவு பெரிய வெற்றியடைந்து என்று சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின், அதே கூட்டணியில் ஜெயிலர் 2 பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு கடந்த வாரம் வெளியானது. ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற இப்படம், உலகளவில் வசூலை வாரிக்குவித்து வருகிறது.
தமிழ்நாடு வசூல்
இந்த நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் முதல் வாரத்தை பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த நேரத்தில், தமிழ்நாட்டில் இதுவரை இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜெயிலர் 2 முதல் வாரத்தின் இறுதி வரை தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 87 கோடி வரை வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 200 கோடியை தாண்டும் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
