படுதோல்வியடைந்த சிக்மா திரைப்படத்தின் இறுதி வசூல்


Sigma movie final box office collection: ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த சிக்மா திரைப்படத்தின் வசூல் குறித்து நாம் ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில், இப்படத்தின் இறுதி வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.


சிக்மா


தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் பிரபல நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: படுதோல்வியடைந்த சிக்மா திரைப்படத்தின் இறுதி வசூல் | Sigma Movie Final Box Office Collection

இப்படத்தில் ஃபரியா அப்துல்லா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும் சம்பத், ஷிவ் பண்டிட், ராஜு சுந்தரம், அன்பு தாசன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: படுதோல்வியடைந்த சிக்மா திரைப்படத்தின் இறுதி வசூல் | Sigma Movie Final Box Office Collection

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. மேலும், தங்களின் எதிர்பார்ப்பை சிக்மா பூர்த்தி செய்யவில்லை என பலரும் கூறிய நிலையில், பாக்ஸ் ஆபிஸில் இப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது.



இறுதி வசூல்



இந்த நிலையில், சிக்மா திரைப்படம் உலகளவில் ஒட்டுமொத்தமாக செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் பாக்ஸ் ஆபிஸில் இறுதியாக ரூ. 13 கோடி வசூல் செய்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: படுதோல்வியடைந்த சிக்மா திரைப்படத்தின் இறுதி வசூல் | Sigma Movie Final Box Office Collection


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *